search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுப்ரீம் கோர்டு"

    வாக்குப்பதிவு மையங்களில் ஒப்புகை சீட்டு முறையை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விளக்கம் அளிக்க தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #ElectionCommission
    புதுடெல்லி:

    காங்கிரஸ், தி.மு.க, தெலுங்குதேசம், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 21 கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தன.

    அதில், பாராளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் ஏதேனும் ஒரு வாக்குப்பதிவு மையத்தில் ஒப்புகை சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த நடைமுறையால் மொத்தம் பதிவான வாக்குகளில் 0.44 சதவீத வாக்குகள் மட்டுமே சரிபார்க்க நேரிடும். இதனால் ஒப்புகை சீட்டு முறையின் நோக்கம் நிறைவேறாமல் போகும். எனவே, 50 சதவீத வாக்குப்பதிவு மையங்களிலாவது ஒப்புகை சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.



    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய், நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், ஒவ்வொரு தொகுதியிலும் ஏதேனும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வாக்குப்பதிவு மையத்தில் மட்டும் ஒப்புகை சீட்டு முறையை நடைமுறைப்படுத்துவதை மறுபரிசீலனை செய்வது குறித்த பிரமாண பத்திரத்தை தலைமை தேர்தல் கமிஷன் 28-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வாக்குப்பதிவு மையங்களில் ஒப்புகை சீட்டு முறையை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர். #SupremeCourt #ElectionCommission 
    ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக அமைச்சரவை அளிக்கும் பரிந்துரையை கவர்னர் ஏற்பாரா? என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. #RajivGandhimurdercase #TNGovernor #BanwarilalPurohit

    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார்.

    அந்த வழக்கில் முருகன், சாந்தன், நளினி உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் பூந்தமல்லி தடா கோர்ட்டு மரண தண்டனை விதித்தது.

    இதை எதிர்த்து அனைவரும் சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன் ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்தது.

    ராபட்பெயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது. மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் நளினியின் தூக்கு தண்டனை கடந்த 2000-ம் ஆண்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள். அந்த மனு மீது முடிவு எடுக்கப்படாததால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரது தூக்கு தண்டனையையும் ஆயுள் தண்டனையாக குறைத்தது. என்றாலும் தங்களை விடுவிக்க வேண்டும் என்று மூவரும் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரையும் விடுதலை செய்வது பற்றி மாநில அரசே தீர்மானிக்கலாம் என்று அதிரடி தீர்ப்பை வெளியிட்டது. இதையடுத்து அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவை கூட்டத்தை கூட்டி 3 பேரையும் விடுதலை செய்யலாம் என்று முடிவு செய்தார்.

     


     

    அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதோடு ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்யக்கூடாது என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தது.

    கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் ரஞ்சன்கோகாய், நவீன் சின்கா, ஜோசப் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இது தொடர்பாக வெளியிட்ட உத்தரவில், “ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு, கவர்னருக்கு பரிந்துரை செய்யலாம். அந்த பரிந்துரையை பரிசீலித்து முடிவு எடுக்கும் அதிகாரம் கவர்னருக்கு உள்ளது” என்று கூறப்பட்டது.

    இதையடுத்து ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையாக வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. தமிழக அரசு இதற்காக நாளை அமைச்சரவை கூட்டத்தை கூட்ட உள்ளது. அந்த கூட்டத் தில் 7 பேரை விடுவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

    நாளை மாலை 4 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் எடுக்கப்படும் முடிவு திங்கட்கிழமை கவர்னருக்கு பரிந்துரையாக அனுப்பி வைக்கப்படும்.

    அந்த பரிந்துரையின் மீது கவர்னர் பன்வாரிலால் புரோகித் எத்தகைய முடிவு எடுப்பார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை ஆவது அவர் எடுக்க போகும் முடிவில்தான் இருக்கிறது என்பதால் அவரது முடிவை தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகரித்து உள்ளது.

    கவர்னர் தன்னிச்சையாக முடிவு எடுப்பாரா? அவருக்கு அந்த அதிகாரம் உள்ளதா? அல்லது அவர் மத்திய அரசிடம் கருத்து கேட்டு விட்டு முடிவு எடுப்பாரா? அந்த முடிவு எப்படி இருக் கும்? என்றெல்லாம் கேள்விக் குறிகள் எழுந்துள்ளன.

    கவர்னர் பன்வாரிலால் தனது கைக்கு அமைச்சரவையின் பரிந்துரை கிடைத்ததும் இதுபற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது. அதன் பிறகு அவர் தனது முடிவை தெரிவிக்க எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்வார் எனத் தெரியவில்லை.

     


     

    ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டம் 161-வது பிரிவின்படி கவர்னருக்கு இந்த விவகாரத்தில் உடனடியாக முடிவு எடுக்க அதிகாரம் உள்ளது. அதாவது 7 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட கவர்னருக்கு முழு அதிகாரம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    சட்டத்துக்கு எதிரான வகையில் குற்றம் இழைக்கும் எந்த ஒரு நபர்களின் தண்டனையையும் ரத்து செய்ய கவர்னருக்கு முழு அதிகாரம் இருப்பதாக அந்த சட்ட பிரிவில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த அதிகாரத்தை பன்வாரிலால் எப்படி கையாளப் போகிறார் என்பதில்தான் எதிர்பார்ப்பு உள்ளது.

    7 பேர் விடுதலையை பொறுத்தவரை மத்திய அரசிடம் எந்தவித கருத்தையும் கவர்னர் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று பெரும்பாலான சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மூத்த வக்கீல் வில்சன் இது தொடர்பாக கூறுகையில், “7 பேர் விடுதலைக்கு தமிழக அரசு அமைச்சரவையில் தீர்மானம் கொண்டு வந்து பரிந்துரை செய்தால் கவர்னர் அதை சட்டப்படியாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அந்த பரிந்துரையை நிராகரிக்க சட்டத்தில் இடமில்லை” என்றார்.

    மற்றொரு மூத்த வக்கீல் ஆர்யமாசுந்தரம் கூறியதாவது:-

    அரசியலமைப்பு சட்டப் பிரிவு 161(1)-ன்படி கவர்னருக்கு என்று பிரத்யேகமாக அதிகாரங்கள் உள்ளன. என்றாலும் கவர்னர் 7 பேர் விடுதலை குறித்து மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தலாம். கவர்னர் ஆலோசனை நடத்தக்கூடாது என்று எந்த சட்டமும் கிடையாது.

    எனவே 7 பேர் விடுதலை விவகாரம் மீண்டும் மறைமுகமாக மத்திய அரசின் கைக்கே செல்ல வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மூத்த வக்கீல் சுதா ராமலிங்கம் கூறியதாவது:-

    தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்வதை கவர்னர் ஏற்றே ஆக வேண்டும். வேண்டுமானால் அந்த பரிந்துரையில் திருத் தங்கள் செய்ய கவர்னர் சொல்லலாம். ஆனால் திருத்தங்களை சரி செய்த பிறகு பரிந்துரையை கவர்னர் ஏற்பதே இறுதியானது.

    அமைச்சரவை பரிந்துரையை கவர்னர் கண்டிப்பாக நிராகரிக்க முடியாது. இந்த வி‌ஷயத்தில் இறுதி அதிகாரம் கவர்னருக்கு உள்ளதா? அல்லது அரசுக்கு உள்ளதா? என்று கேட்டால் மக்களால் தேர்ந் தெடுக்கப்படும் அரசுக்கு தான் உள்ளது என்று சட்ட உட்பிரிவுகள் கூறுகின்றன. எனவே அரசு பரிந்துரையை கவர்னர் ஏற்று நிறை வேற்றியே ஆக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சட்ட நிபுணர்கள் மாறுபட்ட கருத்துகளை கூறி இருப்பதால் கவர்னரின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நீடிக்கிறது. #RajivGandhimurdercase #TNGovernor #BanwarilalPurohit

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. #RajivGandhimurdercase

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது விடுதலைப் புலிகளின் தற்கொலை படையால் படுகொலை செய்யப்பட்டார்.

    இதையடுத்து விடுதலைப் புலிகளையும், அவர்களுக்கு உதவி செய்தவர்களையும் தமிழக போலீசார் வேட்டையாடி கைது செய்தனர். அவர்கள் மீது சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

    குற்றவாளிகளிடம் விசாரணை முடிந்த நிலையில் 1998-ல் தீர்ப்பு வெளியிடப்பட்டது. அப்போது நளினி, முருகன், சாந்தன் உள்பட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் மேல்முறையீடு செய்ததால் 4 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

    தூக்கு தண்டனையை குறைக்க கோரி ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த கருணை மனுவை கடந்த 2012-ம் ஆண்டு ஜனாதிபதி நிராகரித்தார்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு காலதாமதமாக முடிவு செய்து கருணை மனு நிராகரித்துப்பட்டு இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க முயற்சி மேற் கொண்டார்.

     


    இதையடுத்து முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    ஏற்கனவே தண்டனை குறைக்கப்பட்ட நிலையில் 7 பேரும் 27 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருவதால் கருணை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கூறியிருந்தது.

    இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது. ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்யக் கோரும் வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. எனவே அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

    தமிழக அரசு சார்பில் வாதிடும்போது, ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள், தண்டனை காலத்தை கடந்து சிறையில் இருந்து வருவதால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும், கருணை அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதில் மத்திய அரசு எந்த இறுதி முடிவும் எடுக்காமல் தாமதித்து வந்தது. இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் கோரிக்கை மீது மத்திய அரசு 3 மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கெடு விதித்து உத்தரவிட்டது.

    இந்த நிலையில் இன்று இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், வக்கீல் ராகேஷ் ரஞ்சன் ஆகியோர் ஆஜராகி மத்திய அரசின் முடிவு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தனர். அதில் கூறி இருப்பதாவது:-

     


    ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டது மிகக் கொடூரமான குற்றச்செயல் ஆகும். இந்திய ஜனநாயக நடைமுறைப்படி பாராளுமன்ற பொதுத்தேர்தல் பிரசாரத்துக்கு சென்றபோது இந்த படுகொலை நடந்துள்ளது.

    குற்றவாளிகள் ஈவுஇரக்கமின்றி இந்த செயலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அவர்கள் மீது எந்தவித கருணையும் காட்ட முடியாது. அதற்கான தகுதி இல்லை.

    அவர்களை விடுதலை செய்வது அபாயகரமானது. மோசமான முன்னுதாரணமாக அமைந்து விடும். நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறை என பல மட்டத்தில் ஆலோசனை நடத்தியதில் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எந்த தகுதியும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

    குற்ற நடைமுறைச் சட்டம் 435-வது பிரிவின்படி இந்த வி‌ஷயத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. மத்திய அரசின் இந்த முடிவு தமிழக அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது.

    இவ்வாறு மத்திய அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 7 பேரையும் மத்திய அரசு விடுவிக்க மறுத்து விட்டது உறுதியாகி உள்ளது.

    இந்த அறிக்கையுடன் 7 பேரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தற்கான ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் முடிவை சுப்ரீம்கோர்ட்டு ஏற்றுக் கொண்டதாக அறிவித்தது. அப்போது தமிழக அரசு வக்கீல் எழுந்து, 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு மீண்டும் கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

    ×